சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர் உட்கோட்டம் தொளசம்பட்டி காவல் நிலைய எல்லையான மானத்தால் கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் (32), என்பவர் கடந்த (28/4/2023) அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது ஓலைப்பட்டி மானத்தால் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் சித்துராஜ் (38) என்பவர் தன்னை வழிமறித்து கன்னத்தில் அடித்து தொலைபேசி பிடுங்கிக் கொண்ட ஆபாசமாக பேசியதற்காக எனது இரண்டு வண்டிகளை பிடித்து கேஸ் போட்ட உன் பட்டா நிலத்திலேயே மண் எடுத்தேன் நீ என் வண்டியை பிடிப்பியா என்று சொல்லி குற்றவாளி சித்துராஜ் வைத்திருந்த வீச்சு அருவாளால் தன்னை வெட்ட வந்ததாகவும் அங்கிருந்து தப்பி வந்த கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரில் துளசம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சிவகுமார் அவர்கள் அறிவுறுத்தலின்படி தொளசம்பட்டி காவல் ஆய்வாளர் திரு.தொல்காப்பியன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.அழகு துறை அவர்கள், தலைமையில் தனிப்படை அமைத்து தலைமறைவான குற்றவாளியை பல இடங்களில் தேடிவந்த நிலையில் இன்று குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தலைமறைவாக இருந்த குற்றவாளியை கண்டுபிடித்த தனி படையினரை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்