திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டுவல்லூர்காட்டூர் திருவெள்ளவாயல் உள்ளிட்ட மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி விழாவை ஒட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் வீடுகள் இல்லாத அனைவருக்கும் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு்கள் வழங்க வேண்டும் எனவும் 100 நாட்கள் பணி முறையாக வழங்கிட வேண்டும் எனவும் மழைக்காலத்தில் வெள்ள நீர் ஊருக்குள் புகாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வல்லுர் ஊராட்சியில் உள்ள 25 ஏக்கர் மேய்க்கால் அரசு புறம்போக்கு இடங்களை கால்நடைகள் பயன்பாட்டிற்கு மீட்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். முன்னதாக
தற்கொலை குழந்தை திருமணம் போன்றவற்றை தடுத்து நிறுத்தி பாலின பாகுபாடு இன்றி அனைவரும் சமத்துவத்துடன் ஒற்றுமையாக தமிழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்போம் என கிராம மக்கள் உறுதி மொழியை உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து ஏற்றுக்கொண்டனர்.
கிராம சபை கூட்டங்களில்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல் ராமன் அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் துணைத் தலைவர் எம் .டி .ஜி கதிர்வேல்மற்றும் வல்லூர் ஊராட்சி மன்ற தலைவர்உஷா ஜெயக்குமார் திருவெள்ளவாயல் ஊராட்சி மன்ற தலைவர் முத்து உள்ளிட்டவர்கள் சிறப்பாக கிராம மக்களுடன் இணைந்து கிராம சபையை நடத்தி பல்வேறு முக்கிய தீர்மானங்களை இயற்றினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு