சேலம் : மே தினத்தை முன்னிட்டு ஆணையம்பட்டி, 74 கிருஷ்ணாபுரம் கிராமங்களில் நடைபெற்ற கிராம சபா கூட்டங்களின் போது சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கனவு திட்டமான “நல்லிணக்கம் நாடி” என்ற தலைப்பில் கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழிப்புணர்வின் போது POCSO Act, குழந்தை திருமணம், kaaval uthavi App, சாலை பாதுகாப்பு விதிகள், கவனத்தை திசை திருப்பும் வழக்குகள், மற்றும் போதைப்பொருள் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தேவைப்படும் அவசர கால உதவி எண்களான 100, 101, 104, 181, 1098, 1930, 14417, 14567 பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேற்கண்ட நிகழ்ச்சியினை பொதுமக்கள் வெகுவாக ரசித்து பாராட்டு தெரிவித்தார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்