திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் 2ஆம் கட்டமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2ஆம் கட்ட போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கமும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், பணிக்காலத்தில் உயிர் இழக்கும் கிராம உதவியாளர்கள் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்கிட வேண்டும், 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் இணைந்து உயிரிழந்த கிராம உதவியாளர்கள் குடும்பத்திற்கு பணப்பலன்களை வழங்கிட வேண்டும், புதியதாக பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு சிபிஎஸ் எண் நிரந்தரமாக வழங்கிட வேண்டும், என கிராம உதவியாளர்கள் கோரிக்கை.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு