கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5,000 ஆயிரம் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் நிகழ்ச்சிகள் நடத்த வழியின்றி வறுமையில் தவித்து வந்த கிராமியக் கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ரோட்டரி சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி டவுன் காவல் ஆய்வாளர் திரு.பாஸ்கர் அவர்கள் மற்றும் S.I திரு.சிவசந்தர் அவர்கள் இணைந்து 40 கிராமிய கலைஞர்களின் குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கினார்கள்.
கிராமிய கலைஞர்கள் நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினருக்கு தங்களுடைய நன்றிகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டனர்.