திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்.பெரியபாளையம் அடுத்து தண்டலம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சங்கரா கிராமப்புற மருத்துவமனையை தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பால்வளத்துரை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் திரு.ஆல்பி ஜான் வர்கீஸ் IAS, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வருண் குமார் IPS மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன், தண்டலம் கிஷ்ணமூர்த்தி, ஆகியோர் உடன் இருந்தனர்.இதனை தொடர்ந்து ஊத்துக்கோட்டை அடுத்து ஆந்திரா எல்லைக்குட்பட்ட சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டிஸ்வரர் கோவிலில் தமிழக ஆளுநர் சுவாமி தரிசனம் செய்தனர்.கோவில் தலைவர் திரு.முனிசேகர் ரெட்டி கோவில் நிர்வாகம் சார்பில் ஆளுநரை வரவேற்றார்.
திருவள்ளுர் இருந்து குடியுரிமை நிருபர்
V.கோபி