பெரம்பலூர் : பெரம்பலூர் காவல் நிலையம் கவுல்பாளையம் கிராமத்தில் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டு தங்களது கிராமத்தில் உள்ள சில பிரச்சினைகளை எடுத்துக் கூறினார்கள். அவற்றில் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கல்குவாரிக்கு சரக்கு லாரிகள் அதிகமாக காலை நேரத்தில் செல்வதாகவும் அதை ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர். பின்னர் காவல் ஆய்வாளர் திருமதி.நித்யா அவர்கள் பொது மக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி