வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ராஜேஸ் கண்ணன் இ.கா.பா., அவர்கள் விரிஞ்சிபுரம் காவல் நிலைக்குட்பட்ட மேல்மொணவூர், அப்துல்லாபுரம் மற்றும் காட்பாடி எல்லைக்குட்பட்ட பர்ணீஸ்புரம், காந்திநகர், கீழ் மோட்டூர் அசோக் நகர், மதி நகர் மற்றும் தாராபடவேடு ஆகிய பகுதிகளில் கஞ்சா குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என சோதனை மேற்கொண்டும், போதை பொருள்கள் ஒழிப்பு சம்பந்தமாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.
மேலும் காட்பாடியில் உள்ள பள்ளிக்குப்பம் கிராமத்தில் இளைஞர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை பார்வையிட்டார். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சேகர், CWC பிரிவு அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் இருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்