பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பாண்டியன் மற்றும் அவரது குழுவினரான உதவி ஆய்வாளர் திரு.பெரியசாமி மற்றும் தலைமைக் காவலர் திரு.மருதமுத்து ஆகியோர்கள் இணைந்து இன்று 12.02.2022-ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் பொம்மனப்பாடி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும்,
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் குழந்தை தொழிலாளர் முறையை குறித்தும், உங்கள் பகுதியில் குழந்தை தொழிலாளர் முறை இருந்தால் அதனை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் கூறினார்கள்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.