மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கீரிபட்டி கிராமத்தில் சில நபர்கள் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் (29.06.2023), -ம் தேதி உசிலம்பட்டி தாலுகா சார்பு ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் கீரிபட்டி கிராமத்திற்கு சென்று வங்காரு கோவில் பட்டி வீடு மந்தை அருகில் சந்தேகத்திற்கிணங்க கட்டைப் பையுடன் நின்று கொண்டிருந்த செல்வராணி, (45), கிழக்குதெரு, கீரிபட்டி, பசுபதி (64) ஒச்சாத்தேவர், கிழக்குதெரு, கீரிபட்டி, பாண்டீஸ்வரன், பெ.ஈஸ்வரன், கிழக்குதெரு, கீரிபட்டி ஆகியேர்களை விசாரணை செய்து தணிக்கை செய்யும் போது விற்பதற்காக வைத்திருந்த சுமார் 4.2 கிலோ கிராம் அளவுள்ள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் மேற்படி குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளிடமிருந்து 4.2 கிலோ கிராம் கஞ்சா, மற்றும் மூன்று அலைபேசிகள் (Cell Phone) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக ஆந்திராவில் வசித்து வரும் கீரிபட்டி, கிழக்கு தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு உயரதிகாரிகள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தார்கள்.
மேலும், மதுரை மாவட்டத்தில் இது போன்று சட்டவிரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர்கள் பெரும்பாலும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து மதுரை மாவட்டத்தில் விற்பனை செய்வதாக தகவல் தெரியவந்ததால் தனிப்படை அமைக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது. இனி வரும் காலங்களில் இது போன்று வெளி மாநிலங்களிலிருந்து சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்து உள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்