பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சுஜாதா அவர்கள் தனது குழுவுடன் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் கிராமங்களாக கருதப்படும் அரசலூர், அன்னமங்கலம், வேப்பந்தட்டை, ஒகளூர், அகரம்சீகூர் ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மது விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் திருந்தி வாழும் நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் குறித்து விசாரித்தும் அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். பின்னர் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மது விற்பது, காய்ச்சுவது, ஊரல் போடுவது போன்ற குற்றங்களில் எவரேனும் ஈடுபட்டால் அது குறித்த தகவலை 10581 என்ற இலவச எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது மாவட்ட காவல் அலுவலக எண்ணிற்கு 9498100690 தகவல் தெரிவிக்கலாம் இரகசியம் காக்கப்படும் என்று கூறினார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக பெரம்பலூர் மாவட்ட காவல்துறை