தேனி : தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய *காவல் ஆய்வாளர் திருமதி. மங்கையர் திலகம்* அவர்கள் தலைமையில் SI திருமதி.சுமதி, WHC, திருமதி.முருகேஸ்வரி, WHC, திருமதி.கலைவாணி ஆகிய போலீசார்கள் T.கள்ளிப்பட்டி கிராம பகுதிக்குச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள், குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் தங்களுக்கும், தங்களை சார்ந்தவர்களுக்கும் ஏற்படும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான Child Help line Number. 1098 மற்றும் காவல் நிலையத்தின் தொலைபேசி எண்களை தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.















