மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ளது. சாத்தியார் அணை இதைச்சுற்றியுள்ள பகுதிகளில், உள்ள கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வகுத்து மலை, கல்லுமலை அடிவாரத்தில், வைகாசிபட்டி, கோவில்பட்டி, போன்ற கிராமங்களுக்கு செல்லும் சாலையானது, வனத் துறைக்கு சொந்தமான இடத்தில் செல்கிறது. இப்பகுதி செல்லக்கூடிய சாலைகள் அனைத்தும் முற்றிலும் சிதிலமடைந்து, போக்குவரத்திற்கு பயன்பாடு அற்ற நிலையில் உள்ளது.
வனத்துறை அனுமதி கிடைக்காத காரணத்தினால், பல ஆண்டுகளாக இந்த பகுதி கிராம மக்கள் சென்று வரபோதிய சாலை
வசதி இல்லை. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் அனைத்தையும் தார்ச்சாலையாக மாற்ற வேண்டி , இப்பகுதி கிராம மக்கள் தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு, சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் கோரிக்கை மனு
கொடுத்து இருந்தனர். இதை பரிசீலித்த, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட வனத்துறை அதிகாரி குருசாமி தபலா, மற்றும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, அதிகாரிகள் சம்மந்தப்பட்ட சாத்தியார் அணையை சுற்றியுள்ள வனத்துறை சார்ந்தமலை அடிவார சாலைகள் அனைத்தையும் அளவீடு செய்திருந்தனர்.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தூர அளவில்,சாலையின் அகலம் ஏழரை மீட்டர் அளவிலும், அத்துமால் செய்தனர். இந்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அளவீடு பணிகள் நடைபெறும் போது, அனைத்து அரசு அதிகாரிகள், பேரூராட்சி மன்ற தலைவர்கள் , ஊராட்சி மன்ற தலைவர்கள் , மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மாவட்ட , ஒன்றிய, நகர, திமுக நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். இது பற்றி அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கூறியதாவது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் காலம் வந்து விட்டது. இதனால், இப்பகுதி உள்ள கல்லுமலைகந்தன் சுவாமி கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கும், எங்களது கிராமத்திற்கு செல்வதற்கு வசதியாக அமையும். இதற்காக அரசுக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னதாக, வெங்கடேசன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது. வைகாசி பட்டி பகுதி உள்ளிட்ட பலகிராமங்களுக்கு இந்த மலை சாலை பயனுள்ளதாக அமையும். மேலும், இந்த பணிகள் தொடங்க வேண்டிய ஏற்பாடுகள் துரிதமாக நடக்கும். இதேபோல், சரந்தாங்கி, முடுவார்பட்டி மலை சாலைகளும் , வனத்துறையின் அனுமதியின் பேரில், பணிகள் நடைபெறும் ‘இவ்வாறு அவர் கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி