விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் பகுதியில் இருந்து, சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் செல்லும் வழியில், தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் சடலமாக மிதந்தது. அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்கள், கிணற்றில் ஆண் சடலம் மிதப்பது குறித்து சேத்தூர் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்து விரைந்து சென்ற போலீசார், கிணற்றில் சடலமாக மிதந்த உடலை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், தற்கொலை செய்து கொண்டாரா, இல்லை யாரவது கொலை செய்து உடலை கிணற்றில் வீசினார்களா என்பது குறித்து, சேத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி