பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் மற்றும் குன்னம் காவல் நிலையத்தில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு காவல் பாதுகாப்பு பணியின் போது பொதுமக்களிடம் அணுகும் முறை,காவல் நிலையத்துக்கு வரும் புகார் மனுக்களை விசாரிக்கும் முறை,காவல் நிலைய பணிகளை சட்டப்படி அணுகும் முறை, குற்றவாளிகளை கைது செய்யும் போது நீதிமன்ற கட்டளைகளை கடைபிடிக்கும் முறை,கொரோனா நோய் தொற்று காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு கவனத்தில் கொண்டு காவல் பணிகளை முன்னெச்சரிக்கையுடன் கையாளுவது,பணியின் போது மன அழுத்தத்தை கையாளும் முறை குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் காவல்துறையினருக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.