இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள கரிக்கல் கிராமத்தை சேர்ந்த திரு. ரத்தினம் என்பவர், கடந்த சில நாட்களாக பக்கத்து வீட்டில் வசிக்கும் நரசிம்மன் என்பவரால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தார். நரசிம்மன், திரு. ரத்தினம் மற்றும் அவரது குடும்பத்தினரை நோக்கி தொடர்ந்து தகாத கெட்ட வார்த்தைகளால் திட்டுவது அவர்களுடைய நடத்தையை தவறாக பேசுவது, மற்றும் தெருவில் கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்படும்படியாக செயல்படுவது ஆகியவற்றால் மேலும் அக்கிராமத்தில் அமைதிக்கு இடையூறாக இருப்பது. திரு. ரத்தினம் நரசிம்மன் இடம் இதைப் பற்றி கேட்டபோது, நரசிம்மன் ரத்தினத்தின் வீட்டிற்குள் புகுந்து ரத்தினத்தை தாக்க முயன்றிருக்கிறார்.
இதனை கொண்டபாளையம் காவல் நிலையத்தில் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த கொண்டபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. கோபி, சம்பவ இடத்திற்கே நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு இரு தரப்பையும் விசாரித்து ஆலோசனை செய்து, நரசிம்மனிடம் இனிமேல் இது போன்ற தவறுகள் நடைபெறாது என எழுத்து மூலம் எழுதி வாங்கி இனி சண்டையிடமாட்டேன். என்று நரசிம்மனிடம் உறுதி பெற்று கொண்டார். பிரச்சினையை சமாதானத்துடனும் மற்றும் சுமுகமாக இந்த பிரச்சினையை தீர்த்து வைத்தார். பொதுமக்களின் மனநலத்தையும், சமூக அமைதியையும் பாதுகாக்கும் வகையில் உதவி ஆய்வாளர் திரு. கோபி எடுத்த நடவடிக்கை காவல் துறையின் மனிதநேயம் சார்ந்த சேவையை வெளிக்காட்டுகிறது. அவரது நேர்மையான மற்றும் அதிரடி சேவையை கரிக்கல் கிராம மக்கள் மற்றும் நியாயம் விரும்பும் குடிமக்கள் வாழ்த்தி பாராட்டுகின்றனர்.

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்