நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் நகர் மத்திய காவல் நிலையம் மிகவும்பழமைவாய்ந்த காவல் நிலையமாகும். தற்போது புது கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த காவல் நிலையம் கடந்த 2016 ம் ஆண்டுவரை பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது.
1859 ம் வருட சென்னை மாநகர சட்டம் 7 ன் படி 1860 ம் ஆண்டு இந்த வரலாற்று கட்டிடமானது நீலகிரி மாவட்டத்தில் முதல் காவல் நிலையமாக மாற்றப்பட்டு ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 55 காவலர்களுடன் செயல்பாட்டில் இருந்துள்ளது. 1860 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்த கட்டிடம் மருந்தகமாக செயல்பட்டு வந்துள்ளது. பின்னர் 1865 ம் வருட சென்னை மாநகர சட்டம் 10 ன்படி காவலர்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பின்னர் 1906 ம் ஆண்டு கோவை காவல் மாவட்டத்தில் இருந்து நீலகிரி காவல் மாவட்டமாக பிரிக்கப்பட்டு புதிதாக இரு காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 1921 ம் ஆண்டு ஏற்பட்ட மாப்ளா புரட்சியின் போது இந்த காவல் நிலையம் புரட்சிக்காரர்களால் தாக்கப்பட்டு அப்போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர் திரு சேஷகிரி ராவ், காவல் உதவி ஆய்வாளர் திரு. ஷேக்மொகிதீன் சாஹிப் மற்றும் இரண்டு காவலர்கள் | குட்டிகிருஷ்ண நாயர் மற்றும் 2. ஈச்சரன் நாயர் தங்களது இன்னுயிரை தியாகம் செய்தது தெடர்பாக காவல் நிலையத்தில் கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1955 ம் ஆண்டு உதகை நகர உட்கோட்டம் தெடங்கியபோது இந்த காவல் நிலையம் கிழக்கு வட்ட காவல் நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பழைய காவல் நிலையமானது காவல் கண்காணிப்பாளர் திருமதி. என். எஸ். நிஷா. இ.கா.ப அவர்களின் உத்தரவு படி காவலர் குழந்தைகளை பராமரிக்கும் காப்பகமாக மாற்றம் செய்ய நீலகிரி மாவட்ட காவலர் உணவு அங்காடி நிதியிலிருந்து அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு தற்போது திறக்கபட்டுள்ளது. இந்த காப்பகமானது காலை 08.30 மணிமுதல் மாலை 05.30 மணிவரை திங்கள் முதல் சனி வரை செயல்படும். குழந்தைகளை பராமரிக்க பெண்காவலர்கள் இருவர் மற்றும் பெண் ஊர்க்காவல் படையினர் இருவர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
காப்பகத்தில் இரண்டு வயதிற்கு மேல் உள்ள மற்றும் ஐந்து வயதிற்கு உள் இருக்கும் காவலர்களின் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மேலும் காப்பகத்திற்கு அருகில் இருக்கும் விளையாட்டு மைதானமானது காவல்துறையினர் குழந்தைகள் விளையாட ஏதுவாக மாலை 07.00 மணிவரை திறந்திருக்கும். மேலும் காவலர் குடும்பத்தினர் மைதானத்திற்குள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த காப்பகமானது 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது.
இந்த காப்பகம் தொடங்கப்பட்டதன் மூலம் உதகை நகர தலைமையிடத்தில் பணிபுரியும் ஏராளமான காவலர்கள் குறிப்பாக பெண் காவலர்கள் ஊக்குவிக்கப்பட்டு பயன்பெறுவார்கள். பணிக்கு செல்லும் காவலர்கள் தங்களது குழந்தைகளை தனியே விட்டுசெல்லும் சூழ்நிலையில் பணியில் கவனச்சிதறல் ஏற்பட்டு நிம்மதியின்றி தவிக்கும் சூழ்நிலை இந்த காப்பகம் தொடங்கப்பட்டதன் மூலம் முற்றிலும் தவிர்க்கப்படும். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த காப்பகம் தொடங்கிய முயற்சியின் மூலம் குறிப்பாக பெண் காவலர்கள் தங்களது குழந்தைகளின் பராமரிப்பு பற்றி கவலையில்லாமல் தங்களது பணியில் முழுக்கவனம் செலுத்தி சிறந்துவிளங்கவும், பெண்காவலர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பணியை செவ்வனே செய்யவும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் இந்த “Hill Cop Creche” காவலர் குழந்தைகளின் காப்பகமானது இன்று 04.10.2025 ம் தேதி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு டி செந்தில்குமார். இ.கா.ப அவர்களால் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. உடன் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. என் எஸ் நிஷா. இ.கா.ப, நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணப்பாளர்கள் திரு சௌந்திர ராஜன், திரு மணிகண்டன், துணைகாவல் கண்காணிப்பாளர்கள் திரு. நவீன்குமார் திரு ராஜ்குமார், மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஆகியோர்கள் இருந்தனர்.மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலும் பெண்கள் தயக்கமின்றி பொது இடத்தில் தங்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை காவல்துறைக்கு எளிதாக தெரியப்படுத்தும் வகையிலும் “Pk Pan” என்ற பெயரில் பெண் காவளர்கள் இருசக்கர ரோந்து வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இவர்கள் காலை 10.00 மணிமுதல் 11.00 மணியரையிலும் மற்றும் மாலை 6360 மணிமுதல் 0700 மணிவரை பெண்கள் அதிகம் கூடும் இடங்களான மார்கெட் உழவர் சந்தை, பேருந்து நிலையம் சுற்றுலா இடங்கள் ஆகிய இடங்களுக்கு ரோத்திற்கெ பிரத்தியோகமாக தயார்செய்யப்பட்டுள்ள மேலங்கி அணிந்து இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்றும் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒலி பரப்பி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.
மேலும் இவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கும் நேரத்திலும் முடியும் நேரத்திலும் அந்த பகுதிகளில் போந்து செய்து அந்த இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் (ஈவ்டீசில் இருந்து தற்காத்து மாணவிகள் தைரியத்துடன் செயல்பட இந்த “Pink Parol” ராந்து வாகனம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
மாவட்டத்தில் மொத்தம் 10 உதகை நகரம்-உதகை ஊரகம்-2 குன்றூர்-2 கோத்தகிரி- கூடலூர்-2) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இளஞ்சிவப்பு ரோந்து வாகணத்திணை இன்று 04.10.2025 ம் தேதி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு டி செந்தில்குமார் இகாப அவர்களால் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. உடன் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி என் எஸ் நிஷா இகாப, நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணப்பாளர் திரு சௌந்திர ராஜன் திரு மணிகண்டன் துணைகாவல் கண்காணிப்பாளர்கள் திரு நவீன்குமார் திரு ராஜ்குமார் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஆகியோர்கள் இருந்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
திரு. லாரன்ஸ்