திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் (19.09.2024) மன்னார்குடி உட்கோட்டம், தலையாமங்கலம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தும், நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலைகளையும் ஆய்வு செய்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். பொதுமக்களை அச்சுறுத்தி, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காலதாமதமின்றி விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.
ஆய்விற்கு பிறகு காவல் நிலைய பகுதியில் மரக்கன்று நட்டு வைத்தார்கள். ஆய்வின் போது மன்னார்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.A.அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் அவர்கள் உடனிருந்தார்கள்.