திருவாரூர் : திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri).,* அவர்கள் இன்று (12.12.2023)கூத்தாநல்லூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்கள். காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு தற்சமயம் புலன் விசாரணையில் உள்ள முக்கிய வழக்குகளை ஆய்வு செய்தார்கள். குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ள வழக்குகளில், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய அறிவுரைகள் வழங்கினார்கள். கோப்புக்கு எடுக்கப்படாமல் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து, நீதிமன்றத்திற்கு சென்று சம்மந்தப்பட்டவர்களை சந்தித்து, வழக்குகளை உடனடியாக கோப்புக்கு எடுக்க காவல் ஆய்வாளருக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை ஆய்வு மேற்கொண்டார்கள். NBW நிலுவையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளை உடன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, நீதிமன்ற விசாரணையை விரைத்து முடிக்க காவல் ஆய்வாளருக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். காலையிலும், மலையிலும் பகல் நேர ரோந்து அனுப்பி, கூட்டம் உள்ள இடங்களில் ரோந்து காவலர்கள் சென்று சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதிக அளவில் இரவு ரோந்து அனுப்ப வேண்டும் எனவும் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் திருட்டு போன்ற எந்த சட்ட விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்கள். ஆய்வின் போது திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.A.சிவராமன் அவர்கள் உடனிருந்தார்கள்.