மதுரை : மதுரை மாநகர் மதிச்சியம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. செல்வி அவர்கள் காவல் நிலையத்திற்கு வரும் அனைத்து பொதுமக்களையும் அன்புடன் வரவேற்க சுழற்சி முறையில் வரவேற்பாளர்களை (Receptionist) நியமித்துள்ளார்.
காவல் நிலையம் செல்ல வேண்டும் என்றாலே இன்னும் பலருக்கு தயக்கம் தான். யாரை பார்ப்பது, நம் பிரச்சனையை குறித்து புகார் அளிக்கலாமா? வேண்டாமா? அல்லது புகார் குறித்து ஆலோசனை மட்டும் பெறலாமா? என்பது குறித்து பொதுமக்களிடம், அச்சம் நிலவி வருகின்றது. அந்த அச்சத்தை போக்க மதுரை மாநகர காவலுக்கு உட்பட்ட மதிச்சியம் காவல் ஆய்வாளர் திருமதி.செல்வி நீக்கி, பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக, புதுமையை புகுத்தியுள்ளார். முதலில் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே, அன்புடன் அரவணைப்பு மற்றும் கனிவு மூலமாக பாலத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த வரவேற்பாளர்கள் பொதுமக்களிடம் அன்பாகவும், அவர்கள் பரிபூரண திருப்தியடையும்படியும், முழுமையான மனநிறைவடையும்படியும் பேசி அவர்களது குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு காவல்நிலையத்தில் தேவைப்படும் உதவிகளை உடனுக்குடன் செய்துகொடுத்து அதன்பின்னர் உடனடியாக உயர் அதிகாரிகளிடம் அழைத்து வரவேண்டும் எனவும் காவல் ஆய்வாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.A.வேல்முருகன்