திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் (19.01.2026) கூத்தாநல்லூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களது ஆய்வின் போது, காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை கவனமாக ஆய்வு செய்து, பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலைகளையும் மதிப்பீடு செய்தார்.
மேலும், காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு சரியான முறையில் வழக்குகளை பராமரிப்பது, பொது பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவது மற்றும் தற்போதைய நிலைகளை மேம்படுத்துவதற்கான அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வு, காவல் நிலைய செயல்பாடுகள் நியாயமான முறையில் நடக்கும் வகையில் உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.
















