திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் இன்று (03.08.2024) மன்னார்குடி உட்கோட்டம், மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு பணியிலிருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்கள்.
அப்போது, பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மன்னார்குடி நகரில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர் உடனடியாக கைது செய்யப்பட்டது குறித்தும், பொதுமக்களுக்கு இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்கள்.
அப்போது, மன்னார்குடி உட்கோட்ட (பொறுப்பு) துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K.பாஸ்கரன் அவர்கள் உடனிருந்தார்கள்.