திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் (12.01.2026) நன்னிலம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை விரிவாக ஆய்வு செய்ததுடன், பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலை, விசாரணை முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து கவனம் செலுத்தினார். மேலும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டிய அவசியம் குறித்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின் முடிவில், வழக்குகளை விரைந்து முடித்து நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படாமல் செயல்பட வேண்டும் என்றும், காவல் நிலைய நிர்வாகத்தை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
















