அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உட்கோட்டம் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் 03.10.2020 அன்று திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
காவல் நிலைய பதிவேடுகளை ஆய்வு செய்த பின்னர் காவலர் குடியிருப்புகளில் மரக்கன்று நடும் செயலை மேற்கொண்டார். உடன் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள், ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.தேவராஜ் மற்றும் உடையார்பாளையம் வட்ட காவல் ஆய்வாளர் திரு. சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.