மதுரை : வீட்டை காப்பவலும் பெண். நம் நாட்டை காப்பவலும் பெண். ஆம் நம் காவல் தேவதைகளான பெண் காவலர்கள் தான். தன் வீட்டையும் காத்து, நம் நாட்டையும் பாதுகாக்கும் உன்னத பணியில் ஈடுபடுபவர்கள் நம் பெண் காவலர்கள். ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் இன்றியமையாத நிகழ்வு என்றால் அது அப்பெண்ணின் வளைகாப்பு தான். ஒரு நாட்டை ஆளும் தலைவனையும், சமூகத்திற்கு உழைக்கும் மனித சமுதாயத்தையும் தன் கருவில் சுமப்பவள் பெண். வளைகாப்பு என்பது அப்பெண்ணிற்கு மட்டுமல்ல அந்ந குழந்தைக்கும் அது மகிழ்ச்சியான தருணம். அத்தகைய இனிமையான தருணத்தை அமைத்து கொடுத்து இருக்கின்றார் காவல் உதவி ஆணையர் திருமதி.லில்லி கிரேஸ்.
மதுரை மாநகர் மதிச்சியம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் திருமதி. அமுதவள்ளி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையிலும் காவல்நிலையத்தில் இரவுபகல் பாராமல் தொடர்ந்து பணிசெய்துவந்த தகவல் அண்ணாநகர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லி கிரேஸ் அவர்களுக்கு கிடைத்தது.
உடனடியாக அமுதவள்ளி அவர்களின் பணியை ஊக்கப்படுத்துவதற்காக காவல் நிலையத்திலேயே அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை அனைத்து ஆண் மற்றும் பெண் காவலர்கள் இணைந்து கொண்டாட அனைத்து ஏற்பாடுகளைகளையும், காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லி கிரேஸ் அவர்கள் செய்தார்கள். இந்த வலைகாப்பு நிகழ்ச்சி நடத்தியதை பொதுமக்கள் மற்றும் அமுதவள்ளி குடும்பத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தனக்கு கீழ் பணியாற்றும் பெண் காவலரை மனதை குளிரச்செய்த காவல் உதவி ஆணையர் திருமதி.லில்லி கிரேஸ் அவர்களின் எளிமையை சக காவல்துறையினர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
திரு.சேவியர்
மதுரை மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
மதுரை.