கள்ளக்குறிச்சி : காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட காவல் நிலையங்களுக்கு புதிதாக வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் (13.01.2023), –ந் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு N.மோகன்ராஜ்., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 37 வரவேற்பாளர்களுக்கு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிதாக அளிக்கப்பட்ட சீருடையுடன் கலந்து கொண்ட வரவேற்பாளர்களிடம் உரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையங்களுக்கு புகார் தெரிவிக்க வரும் பொது மக்களிடம் பணிவுடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும், புகார்தாரரை இருக்கையில் அமரச் செய்து அதன் பின் அவர்களது குறைகளை கேட்டறிய வேண்டும், புகார் மனுவை பெற்று பதிவேட்டில் பதிந்து நிலைய பொறுப்பாளரிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும், அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் நிலையத்திற்கு வரும்போது காயம் ஏதும் ஏற்பட்டு இருந்தால் முதலில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவர அறிவுறுத்த வேண்டும், அவர்களிடம் மருத்துவமனையிலேயே புகார்கள் பெறப்படும் எனவும் அறிவுறுத்த வேண்டும் மேலும் புகார் மணு எழுத தெரியவில்லை என்றால் அவரது குறைகளை கேட்டறிந்து அவர்கள் சொல்லும் நடையிலேயே புகார் மனுக்கள் எழுதி கொடுக்க வேண்டும் என வரவேற்பாளர் பணி குறித்து அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சண்முகம் அவர்கள் உடன் இருந்தனர்.