நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட SP திரு.செ.செல்வநாகரத்தினம்,IPS அவர்கள் மயிலாடுதுறை உட்கோட்டத்திற்கு உட்பட காவல்நிலையங்களை ஆய்வு மேற்கொண்டார்கள். பின்னர் மயிலாடுதுறை காவல் நிலைய சிசிடிவி கண்காணிப்பு அறையை ஆய்வு மேற்கொண்டார்கள். நகரின் முக்கிய பகுதிகளில் ஏதேனும் செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை, உடனடியாக கண்டறிந்து பழுது நீக்க உத்தரவிட்டார்கள்.
மேலும் காவல் நிலையத்தில் கிடப்பில் இருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்கவும், காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் அவர்களின் தன்மை அறிந்து தன்மையோடு அணுக வேண்டும் எனவும், காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், காவல் நிலையத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் IPS அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்கள். இந்த நிகழ்வில் மயிலாடுதுறை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அண்ணாதுரை அவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.
நாகப்பட்டினத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.பிரகாஷ்