திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் இன்று (14.03.2026) திருவாரூர் உட்கோட்டம் , கொரடாச்சேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலாம் காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தும், பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலைகளையும் ஆய்வு செய்தும், அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, காவல் நிலையங்களில் மனுதாரர்களை அணுகும் முறைகள், கைதிகளை கையாலுவது பற்றியும் மற்றும் வழிக்காவல் மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும், பணியின் பொழுது பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்கள்.
















