விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் திரு.மனேகரன் உத்தரவின் பேரில், இராஜபாைளையம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில்
இருசக்கர வாகனத்தில் செல்லக் கூடிய வாகன ஓட்டிகள் தலைக் கவசம் , இருசக்கர வாகனத்தில் சைடுகண்ணாடி, கண்டிப்பாக இருக்க வேண்டும்.
மேலும், மது அருத்தி விட்டு வாகனம் ஓட்ட கூடாது, இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயனம் செய்ய கூடாது , மேலும் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் , லைசன்ஸ் உள்ளிட்டவைகளை பின் பற்ற வேண்டும் என வழியுறுத்தி, பஞ்சு மார்க்கட் பகுதியில் தொடங்கி , காந்தி சிலை ரவுண்டானா, பழைய பேருந்து நிலையம் வழியாக மாரியம்மன் கோவில் திடல் வரை ,
காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன். ஆய்வாளர்கள் திரு.முத்துக்குமரன், திரு.பவுல் திரு.ஜேசுதாஸ், திரு.மரிய பாக்கியம், திருமதி.மகேஸ்வரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.