சிவகங்கை : குற்றங்களைத் தடுக்க போலீஸார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களைக் கண்காணிக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித் நாதன் ராஜகோபால் இ.கா.ப அவர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிவகங்கை மாவட்டத்தில் ‘இ-பீட்’ செயலியை அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து நீதிமன்ற இ-வாரண்ட், இ-சம்மனையும், இ-பீட் உடன் இணைத்து ரோந்து போலீஸார் மூலம் உடனுக்குடன் குற்றவாளிகளுக்கும், சாட்சிகளுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தார். குற்றங்களைத் தடுக்க அவர் புகுத்திய நவீன முறை தேசிய அளவில் 2-ம் இடத்தை பிடித்ததையடுத்து அவருக்கு 12.03.2020-ம் தேதியன்று புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது வழங்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்