தென்காசி : நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நம் நாட்டின் 75வது சுதந்திர தினவிழா கொண்டடவிருப்பதை முன்னிட்டு தென்காசி ஈஸ்வரன் பிள்ளை பள்ளி மைதானத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தென்காசி மாவட்ட காவல் துறையின் சார்பாக ஈஸ்வரன் பிள்ளை பள்ளி மைதானத்தில், மாவட்ட ஆயுதப்படை காவலர்கள்,வனத்துறையினர்,ஊர்க்காவல் படையினர் மற்றும் NCC மாணவர்களின் ஒத்திகை அணிவகுப்பு நடைபெற்றது.