திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலைய காவல் துறையினர் மற்றும் வள்ளியூர் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் புத்தகத் திருவிழா வள்ளியூர் பஜாரில் வைத்து இன்று நடைபெற்றது. இப்புத்தக திருவிழாவில் காவல்துறை சார்பாக வள்ளியூர் காவல் ஆய்வாளர் திரு.சாகுல் ஹமீது அவர்கள், கலந்துகொண்டு புத்தகங்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
புத்தகம் படிப்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவ, மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி நோய்த்தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி நடக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.