திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவிலிருந்து மீண்டு வந்த காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மன அழுத்ததினை போக்கும் கலந்தாய்வு பயிற்சி திண்டுக்கல் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது . இந்த பயிற்சிக்கு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் திரு.எம்.எஸ்.முத்துசாமி , இ.கா.ப. , தலைமை வகித்தார் .
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி . ஜி . ரவளிப்ரியா , இ.கா.ப. , முன்னிலை வகித்தார் . திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை , மனநல மருத்துவர் டாக்டர்.எஸ்.டீன் வெஸ்லி , M.D. ( psyc ) மற்றும் திரு.பி.இ.பிரசாத் சக்கரவர்த்தி , M.Sc. , ( Yog ) ( விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் , அச்சுதாபப்ளிக் பள்ளி , திண்டுக்கல் ) ஆகியோர் பயிற்சியாளர்களாக கலந்துகொண்டனர் .
இந்த பயிற்சி முகாமில் கொரோனாவிலிருந்து மீண்டுவந்த காவலர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் 60 பேர் கலந்துகொண்டனர் . கலந்தாய்வு பயிற்சி முகாமில் சிறப்புரையாற்றிய காவல்துறை துணைத்தலைவர் பேசியபோது கொரோனா என்பது ஒரு நோய் அல்ல , அது ஒரு நோய்த்தொற்று , உடலும் மனதும் மனிதனுக்கு இரண்டு கண்கள் , இரண்டையும் பேணிக்காக்க வேண்டும் . நேர்மறை எண்ணங்களுடன் செயல்பட்டால் கொரோனாவை வெல்லலாம் என்றார் . திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசியபோது , காவலர்கள் மனதைரியத்துடன் இருக்க வேண்டும், எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் . மனநல மருத்துவர் பேசியபோது , காவல் பணியில் உள்ளவர்களுக்கு கவலைகள் அதிகம் இருந்தாலும் கடமை தவறுவது இல்லை , அவர்கள் பணி , ஓய்வில்லாபணி , ஓய்ந்ததே இல்லை , மனபயம்தான் மன அழுத்தத்திற்குக் காரணம் , மனபயம் மற்றும் மனச்சோர்வை கையாள்வது எப்படி என்று விளக்கினார் . விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் பேசியபோது , நுரையீரலினை பலப்படுத்துவது , மூச்சுப் பயிற்சி செய்வது எப்படி என்பது போன்ற பயிற்சிகளை வழங்கினார் .
காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.ஆ.வீரபாண்டி நன்றியுரை ஆற்றினார் .
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா