தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் குற்றச் செயல்களுக்கெதிராக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரத்தநாடு உட்கோட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் திருவையாறு, வல்லம், பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர் ஆகிய உட்கோட்டங்களில் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் அவர்களின் மேற்பார்வையில் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 16 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.