கோவை: உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் குறைகளை கேட்டறிந்த மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.ஆர்.சுதாகர் இ.கா.ப. அவர்கள் கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று (18.10.2021) மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட
கோவை,ஈரோடு, திருப்பூர்,நீலகிரி சேலம்,நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப் படையில் பணிபுரியும் காவலர் முதல் ஆய்வாளர் வரை உள்ள காவல் துறையினருக்கு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.
இக்குறைதீர்க்கும் முகாமில் காவல்துறையினர் 500க்கும் மேற்பட்ட நபர்களிடம் அவர்கள் குறைகளைக் கேட்டறிந்தும் அவர்களிடம் குறைதீர்க்கும் மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
அம்மனுக்களை பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அமைச்சுப் பணியாளர்களுக்கு உத்தரவு வழங்கினார். மேற்படி மனுக்கள் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தார்