திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் தலைமையில் ஊராட்சித் தலைவர் சுகந்தி வடிவேல் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மீனாட்சி அவர்கள் கலந்துகொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் பாலியல் குற்றங்கள் குறித்தும் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.
பின்னர் ஊராட்சி சார்பில் காவல் நிலையத்திற்கு, காவல் நிலையத்திற்கு நிரந்தரமாக உதவி ஆய்வாளர் வேண்டும் எனவும், ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட வேண்டும் எனவும், கோரிக்கை வைத்தனர்.
இதில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் மதியரசன், பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி, உதவி ஆய்வாளர் மாரிமுத்து, ஊராட்சி துணைத் தலைவர் எம் டி ஜி கதிர்வேல் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்