சென்னை: தரமணி பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் சகுருபானு என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள்நேரில்அழைத்துப்பாராட்டிவெகுமதிவழங்கினார்.
Commissioner of Police Tr.Shankar Jiwal IPS appreciated and rewarded Sahurbanu a volunteer helping the traffic police at Taramani.
சென்னை, தரமணி, தந்தை பெரியார் நகர் பகுதியில் திருமதி.சகுருபானு (வ/45) என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் தரமணி பகுதியில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் தன்னுடைய ஓய்வு நேரத்தில் தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள வேளச்சேரி, தரமணி 100 அடி சாலை, கட்டபொம்மன் தெரு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரமான காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் 07.00 மணி வரைஎனஇருவேளைகளில்,போக்குவரத்தைஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வேளச்சேரி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வருகிறார்.
இதன் பயனாக மேற்படி இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்து சீராக செல்கிறது. மேலும் பெண்மணி சகுருபானு போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது வாகன ஓட்டிகள் முழுவதுமாக அவருக்கு ஓத்துழைப்பு நல்கி வருகின்றனர்.
தரமணி பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் திருமதி. சகுருபானு என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (02.03.2022 ) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்