சென்னை: சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 750 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் 621 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 129 தீயணைப்புத் துறை நிலைய அலுவலர்கள் ஆகியோருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டவர்களுடன் முதலமைச்சர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சி காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைகளில் புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது.
















