இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 05.03.2020 ஆம் தேதி மாலை 05.00 மணியளவில் காவல் சோதனைச் சாவடி திறப்பு விழா மற்றும் கிராம கண்காணிப்பு குழு கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சித்தூர் சாலையில் போர்டின் பேட்டை மற்றும் திருத்தணி சாலையில் பில்லாஞ்சி ஆகிய இடங்களில் செயல்படாமல் இருந்த சோதனைச் சாவடிகள் புதுப்பிக்கப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .மயில்வாகனன் அவர்கள் முன்னிலையில், சித்தூர் சாலையில் உள்ள போர்டின் பேட்டை சோதனைச் சாவடியை தலைமை காவலர் திரு.விஜயகுமாரும், திருத்தணி ரோட்டில் உள்ள பில்லாஞ்சி சோதனைச் சாவடியை உதவி ஆய்வாளர் திரு.மனோகரன் ஆகியோரும் திறந்து வைத்தனர்.
அதன்பின் கிராம கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட கிராம கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
சூதாட்டம், மணல் கடத்தல் ,சாராயம் ,காட்டன் சூதாட்டம் உள்பட பல குற்றச் செயல்கள் இந்த குழுக்கள் மூலம் காவல்துறைக்கு தெரிவித்து சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ஏதுவாக உள்ளது .இந்த குழுக்கள் காக்கிச் சீருடை அணியாத போலீசாக எங்களுடன் கை கோர்த்து செயல்பட்டால் இந்த பகுதியில் எந்த குற்றம் நடக்காமல் தடுக்கலாம்.
இந்த குழுக்களுடன் இணைந்து செயல்பட போலீசாரை நியமித்துள்ளோம். புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்(9677923100) கொடுத்துள்ளோம், எந்த குற்றங்கள் நிகழ்ந்தாலும் அதில் அனுப்பலாம், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சோளிங்கர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட 65 கிராமங்களுக்கு 3 ரோந்து படை அமைக்கப்பட்டு சிறப்புடன் செயல்படுகிறது அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்.
மேலும் இக்கூட்டத்தில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் கிராம கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ,பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்