சென்னை: சென்னை பெருநகர காவல், P3 வியாசர்பாடி காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் திரு. M.D.K. சுரேஷ் குமார் (த.கா.36538), முதல்நிலைக் காவலர் திரு.M. செந்தில்குமார் (மு.நி.கா ), ஆயுதப்படை காவலர் திரு. L. சிவகுமார் (கா.55075) மற்றும் ஊர்க்காவல் படை வீரர் திரு.V.சதிஷ்குமார் ஆகியோர் அன்று வியாசர்பாடி, கள்ளுக்கடை சந்திப்பு அருகே வாகன தணிக்கை பணியிலிருந்தபோது,
ஒரு நபர் இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டே, மற்றொரு நபர் அமர்ந்திருந்த இருசக்கர வாகனத்தை காலால் தள்ளி கொண்டு வரும்போது,
காவல் குழுவினரை பார்த்ததும் இருவரும் இருசக்கர வாகனத்தை திருப்பி தப்ப முயன்றனர். உடனே காவல் குழுவினர் துரத்திச் சென்று, ஒருவரை இருசக்கர வாகனத்துடன் மடக்கிப் பிடித்து, இருசக்கர வாகனங்களுடன் P3 வியாசர்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
P3 வியாசர்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர் தேவராஜ், 21, வியாசர்பாடி, என்பதும், தப்பிச் சென்ற நபர் விஸ்வா (எ) ஸ்கேல் என்பதும் தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் விஸ்வா (எ) ஸ்கேல், வியாசர்பாடி, என்பவரை கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் இருவரும் சேர்ந்து இருசக்கர வாகனங்களை திருடிவந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.