தூத்துக்குடி : 65வது இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு (11.09.2022), தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் தலைமையில் 7 காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 33 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பாக 15 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பட்டு வருகிறது. மேற்படி நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. பாலாஜி சரவணன் அவர்கள் ரோந்து மேற்கொண்டு மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளான சூரங்குடி, வேம்பார், சென்னமரெட்டிபட்டி மற்றும் கோடங்கிபட்டி சோதனை சாவடிகள் உட்பட பல பகுதிகளுக்கு நேரில் சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. விஜயலெட்சுமி, தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பவுலோஸ், ஸ்ரீவைகுண்டம் குற்ற பிரிவு ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன், ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜெமிதா, சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சண்முகவேல், விளாத்திகும் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. பஞ்சவர்ணம் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.