திருவாரூர்: 2024 – பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, தேர்தல் பணிக்கு தனியார் வாகனங்கள் ஈடுபடுத்துவது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் தலைமையில் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் இன்று (28.03.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம் திரு.T.ஈஸ்வரன், தேர்தல் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.A.பிளிப்ஸ் பிராங்கிளின் கெனடி, மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.S.பழனிச்சாமி, மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் திரு.P.ராஜா, தேர்தல் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு ஆய்வாளர் திருமதி.T.ஸ்ரீப்பிரியா, ஆயுதப்படை வாகனப்பிரிவு ஆய்வாளர் திருமதி.S.கோகிலா மற்றும் துணை வட்டாச்சியர் திரு.கமலகண்ணன், வட்டார போக்குவரத்துக்கு அலுவலர் திரு.பழனிச்சாமி, மற்றும் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.