திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி மாவட்டத்தில் உள்ள முக்கிய குற்றவாளிகள் சம்மந்தப்பட்ட வழக்குகள் கண்டறியப்பட்டு அதனை கூகுள் சீட் (Google Sheet) மூலம் கண்காணித்து தண்டனை பெற்று தர ஏதுவாக, காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரையின் படி மாவட்ட குற்ற ஆவண காப்பக தலைமை காவலர் திரு.அஞ்சனகுமார், மாவட்ட தனி பிரிவை சேர்ந்த இரண்டாம் நிலை காவலர் திரு.மாரிமுத்து, ஆகியோர் Google sheet மூலம் மாவட்டத்தில் உள்ள சுமார் 450 குற்றவாளிகள் சம்மந்தப்பட்ட வழக்குகள், தனித்தனியாக Profile தயார் செய்து அவர்களின் பெயர், முகவரி, அவர்களின் மேல் உள்ள சுமார் 1200 வழக்குகளின் விபரங்கள் பதிவேற்றம் செய்து உட்கோட்டம் வாரியாக கண்காணித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
மேற்படி கூகுள் சீட் மூலம் வழக்கு விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படும் போது இன்று எந்த குற்றவாளிக்கு வாய்தா இருக்கிறது எனவும், எந்த நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை வருகிறது எனவும் கண்டறியப்படுகிறது.மேலும் முக்கிய புலன் விசாரணையில் இருந்துவரும் வழக்குகள் குறிப்பிட்ட நேரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வண்ணங்கள் மூலம் எச்சரிக்கை விடுப்பதால் அதனை எளிதில் கண்டறிந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உதவியாக இருந்து வருகிறது.
தென் மண்டலத்தில் கொலை மற்றும் முக்கிய குற்ற வழக்குகளை குறிப்பிட்ட கால அளவிற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் இதுபோன்ற கூகுள் சீட்டை உருவாக்கியவர்கள் மேற்படி காவலர்கள் என்பது கூறிப்பிடத்தக்கது.மேற்படி காவலர்கள் இருவரையும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்..