ஈரோடு : ஈரோடு மாவட்ட காவல்துறையில் 13 போலிசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் பொங்கள் தொகுப்பில் தேங்காய் சேர்த்து வலிறுத்தி சித்தோடு நால்ரோடு பகுதியில் பாஜகா விவசாய அணி சார்பில் ஆர்பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது நேற்று முன்தினம் நடக்கவிருந்த இந்த ஆர்பாட்டத்துக்கான பாதுகாப்பு பணிக்கு செல்ல கோபி மற்றும் பெருந்துறை போலிசாருக்கு உத்திரவிடப்பட்டு இருந்தது காலை 6 மணியில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்திரவிடப்பட்ட நிலையில் 13 போலிசார் தாமதமாக ஆஜாரானதாகக் கூறப்படுகிறது இதையடுத்து அவர்களை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்ய ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சசிமோகன், உத்திரவிட்டுள்ளார்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :