சேலம் : சேலம் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவுக்கு இணங்க இன்று காலை 06.30 முதல் 11.30 மணி வரை சேலம் மாநகரம் நகர மலை அடிவாரம் துப்பாக்கி சூடும் தளத்தில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவக்குமார் அவர்களின் பொறுப்பில் தமிழ்நாடு commento படையினர் மேற்பார்வையில் காவல்துறை கண்காணிப்பாளர் முதல் காவல் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி சேலம் மாநகர காவல் ஆணையர் திருமதி. விஜயகுமாரி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது, இதில் சேலம் மாநகரம், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்கள் மற்றும் சிறப்பு காவல் படை ஏழாம் அணி பேச்சம்பள்ளியை சேர்ந்த காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் சேலம் மாநகர காவல் ஆணையர் அவர்கள் சேலம் சரக காவல் துணை தலைவர் திருமதி.ராஜேஸ்வரி அவர்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சேலம் மாநகர காவல் துறை ஆணையர் திருமதி.லாவண்யா மற்றும் திரு.பாண்டியராஜன் தளவாய் ஏழாம் அணி உட்பட 22 காவல் அதிகாரிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் மற்றும் ரிவால்வர் பிரிவில் முதலிடம் திருமதி.தையல்நாயகி காவல்துறை கண்காணிப்பாளர் ஊரக உட்கோட்டம் சேலம் மாவட்டம் இரண்டாம் இடம் திருமதி. ஆனந்தி காவல் உதவி ஆணையர் சேலம் மாநகரம் மூன்றாம் இடம் திரு.ரவிச்சந்திரன் கூடுதல் காவல் ஆணையர் சேலம் மாநகரம் இன்சாஸ் ரைபிள் பிரிவில் முதலிடம் திரு. புகழேந்தி கணேஷ் காவல்துறை கண்காணிப்பாளர் அரூர் உட்கோட்டம் தர்மபுரி மாவட்டம், இரண்டாம் இடம் திருமதி. தையல்நாயகி காவல்துறை கண்காணிப்பாளர் ஊரக உட்கோட்டம் சேலம் மாவட்டம் மூன்றாம் இடம் திருமதி. ஆனந்தி காவல் உதவி ஆணையர் சேலம் மாநகரம், பிஸ்டல் ரிவால்வர் மற்றும் இன்சாஸ் ஒட்டுமொத்தமாக முதலிடம் திருமதி.தையல்நாயகி காவல்துறை கண்காணிப்பாளர் வைரக உட்கோட்டம் சேலம் மாவட்டம், இரண்டாம் இடம் திருமதி ஆனந்தி காவல் உதவி ஆணையர் சேலம் மாநகரம் மூன்றாம் இடம் திரு.ரவிச்சந்திரன் கூடுதல் காவல் ஆணையர் சேலம் மாநகரம் ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் சேலம் மாநகர காவல் ஆணையர் திருமதி.விஜயகுமாரி அவர்கள் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள். இறுதியாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நன்றி உரை வழங்கினார்கள்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்