விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல்துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஶ்ரீநாதா I,P.S, அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில், திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் திருமதி.பிரேமா, மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையில்
கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு (13.09.2022) மாலை காவல் உதவி செயலி பயன்பாடுகள் குறித்து காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்தும் இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
மேலும் பாலியல் குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் இவற்றிலிருந்து தன்னை காத்துக் கொள்ளும் வழிமுறைகளை எடுத்துகூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்கள்.