திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி காவல் எல்லைக்குட்பட்ட கொண்டாநகரம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் மீது கடந்த 2018 ஆம் வருடம் நிலத்தை அபகரித்ததாக அவரது உறவினர்கள் புகார் அளித்தனர். பாலசந்தர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக்காக காவல் நிலையம் வந்த பாலச்சந்தரை உதவி ஆய்வாளர் அவதூராக பேசி தாக்கியதாகவும், உதவி ஆய்வாளர்க்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், என மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்தார்.
இப்புகார் நேற்று மாநில மனித உரிமை ஆணையர் திரு ஜெயச்சந்திரன் அவர்கள் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கில் உதவி ஆய்வாளர் மனித உரிமை மீறல்கள் எதுவும் புரியவில்லை என்றும், அவர் சட்டப்படியாக நடவடிக்கை எடுத்ததன் பெயரில், அவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டும், மேலும் புகார்தாரர் தனது செல்வாக்கை பயன்படுத்தி காவல்துறை அதிகாரியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், நடந்து கொண்டதற்கு புகார்தாரர்க்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.