திருவண்ணாமலை : உயர்திரு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல் படைத் தலைவர் அவர்கள் அறிவுறுத்தலின் படி Tamilnadu Apex Skill Development Centre – நிறுவத்தினருடன் இணைந்து ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பணிபுரியும்
காவல் ஆளிநர்களுக்கும் முதலுதவி (FIRST AID) சம்மந்தமாக பயிற்சி அளிக்கும்
நோக்கத்துடன் வேலூர் சரகத்தை சார்ந்த வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் ஒவ்வொரு காவல் ஆளிநரும் முதலுதவி சிறப்பு பயிற்சி பெற்று அதை அவர்கள் பணிபுரியும் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவல் ஆளிநர்களுக்கும் பயிற்சி அளித்து முக்கியமாக விபத்து நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது சம்மந்தமாக (10.04.2023)- ந் தேதி முதல் (13.04.2023)- ந் தேதி வரை தினசரியாக 30 காவல் ஆளிநர்கள் வீதம் நான்கு நாட்களுக்கு அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள ஒரு காவல் ஆளிநருக்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பை வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் Dr.M.S.முத்துசாமி IPS., அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பில் முதலுதவி சம்மந்தமான அனைத்து பயிற்சிகளும் காவல் ஆளிநர்களுக்கு அளிக்கப்பட்டது.