புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மணமேல்குடி போலீசார் கடந்த 13 ஆம் தேதி கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்தவுடன் அவர்களிடமிருந்து 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 41 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான குழுவை உட்கோட்ட புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி