சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று முகாம் அலுவலகத்தில் சென்னையில் பெய்து வரும் கனமழையின் போது கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல் மயங்கிக் கிடந்த இளைஞரை தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த டிபி சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி அவர்களை நேரில் அழைத்து அவரது சேவையை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.C.சைலேந்திரபாபு ஐபிஎஸ் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் ஐபிஎஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்